காயங்களுடன் வெளியேறிய நமிதா மாரிமுத்து! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின் இங்கு தான் இருக்கிறாராம்..

television biggbosstamil5 namithamarimuthu
By Edward Oct 14, 2021 12:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. 18 போட்டியாளர்கள் களமிரங்கிய ஒரே வாரத்தில் சில நடவடிக்கையாலும் சக போட்டியாளர்களுடம் சண்டை, உடல்நிலை சரியில்லை என பல காரணங்கள் கூறி திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து வெளியேறினார்.

சைலண்ட்டாக நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வு பற்றி கமல் ஹாசன் பேசாமல் இருந்துள்ளார். நமீதாவிற்கு தாமரை செல்விக்கு ஏற்பட்ட மோதலில் அதில் தாக்கப்பட்ட நமீதா ரத்த காயங்களுடன் வெளியேற்றப்பட்டதாகவும், முதலில் பூந்தமல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வேறொரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னரும் விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நமீதாவை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.