மீண்டும் மீண்டுமா..! பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்..

priyanka raju kamal haasan evition bigg boss 5 abishek
By Kathick Dec 05, 2021 03:30 PM GMT
Report

சின்னத்திரையில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனுடைய ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல் ஹாசன், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது.

ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டும் வந்துள்ள கமல் ஹாசன், இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் ராஜா வெளியேறியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து, தற்போது மீண்டும் எலிமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.