குந்தவை திரிஷா பஞ்சாயத்து..அப்படியாகும்னு நினைக்கல!! இயக்குநர் பார்த்திபன் வறுத்தம்..
திரிஷா பஞ்சாயத்து
விஜய்யிடன் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த சில நாட்களிலேயே, திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்றார் விஜய்.

இந்த விவகாரம் முற்றிய நிலையில், திரிஷா - விஜய் குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். அதிலும் இயக்குநர் பார்த்திபன் ஒரு மேடையில், குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது, அவங்க வெளியே வந்தால் பிரச்சனைகல் வருகிறது என்று கூறினார்.
இதுகுறித்து திரிஷா, என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்போவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார், உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது, கடைசி நேரத்தில் என் பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ மாறிவிடாது.

அது முட்டாள்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகலை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களின் குண நலனை காட்டாது, பேசுபவரின் குணநலனையே காட்டும் என்று காட்டமாக ஒரு பதினை பகிர்ந்தார் திரிஷா. இதற்கு தன் பாணியில் பார்த்திபன் பதிலளித்தார்.
அப்படியாகும்னு
இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியொன்றில், என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நேர்மையாகவும், நகைச்சுவையாகவும் சொன்னேன். அது ஒன்றும் பிரச்சனையாகாது என்று நினைத்துதான் மேடையில் இருந்து கீழே வந்தேன். ஆனால் கீழே வந்த பின்புதான் ஒரு நணபர் என்னிடம், இது பிரச்சனையாகும் பாருங்கள் என்றார்.

இது பிரச்சனையாகும் என்று சத்தியமாக தெரியாது, மறுநாள் அதை நினைத்து ஃபீல் செய்தேன். பெண்கள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நான் சொல்லியதுபோல் ஆகிவிட்டது. அது ரொம்பவே தவறு என்று புரிந்தது.
அந்த 7 நாட்கள் கிளைமேக்ஸ் பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்று பாக்யராஜிடம் சண்டை போட்டவன் நான். நான் சொன்னதற்கு எதிர்வினையும் வந்தது, நான் சொல்ல வந்தது வேறு, சென்று சேர்ந்தது சேறு என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.