வீட்டில் பிரதீப்-க்கு ஆதரவான பேச்சு!! Grand Finale-க்கு முன்பே போட்டியாளரை வெளியேற்றிய பிக்பாஸ்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்திற்கு செல்ல வரும் ஞாயிற்று கிழமை கிராண்ட் பினாலே நடைபெறவிருக்கிறது. யார் வெற்றி பெருவார் என்ற யூகங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. தற்போது பழைய போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து பல விசயங்களை இறுதி போட்டியாளர்களிடம் கலந்துரையாடி வருகிறார்கள்.
அப்படி வெளியே நடக்கும் விசயத்தையும் நிகழ்வுகளையும் போட்டியாளர்களிடம் கூறக்கூடாது என்ற விதிமுறை பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளது. அதை மீறி ஒரு போட்டியாளர் பேசி திடீரென பிக்பாஸ்-ஆல் வெளியே அனிப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சில போட்டியாளர்கள் கோர்ட்வேர்ட் வைத்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை உள்ளே சொல்லிக் கொண்டதை பிக்பாஸ் எச்சரித்து இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை 24 மணி நேர லைவ்வில் பிரதீப்-க்கு வெளியில் இருக்கும் ஆதரவு ரசிகர்கள் பற்றியும் பிரதீப் ரெட் கார்ட் மூல வெளியேற்றப்பட்டது பற்றி ரவீனா அதிகமாக பேசியிருக்கிறாராம். ரவீனாவை திடீரென பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்திருக்கிறார்.
அதிர்ச்சியான ரவீனா நான் என்னத்த பேசித்தொலைத்தேனோ தெரியல, வெளில அனுப்பிடுவாங்களோ என்று புலம்பிய படி சென்றிருக்கிறார். அதன்பின் ரவீனா சென்றதை நினைத்து போட்டியாளர்கள் புலம்பிய போது பிக்பாஸ் அவர்களிடம், ரவீனா சில காரணங்களால் வெளியில் சென்றுள்ளார், மீண்டும் வருவார் என்று சொல்லி இருக்கிறாராம்.
ரவீனா வெளியே போகக்காரணம் பிரதீப் பற்றி பேசியதால் தானா என்ற சந்தேகமும் இறுதி போட்டிக்கு தான் வருவார் என்பதைத்தான் ரவீனா உள்ளே மீண்டும் வருவார் என்று பிக்பாஸ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
#Raveena #Mani #Vishnu speaks about #Pradeep redcard issue and they speaks about adhalam ipo marandhu irupanganu.
— Ahamed Inshaf (@InshafInzz) January 12, 2024
What's your thoughts about this?#BiggBossTamil #BiggBossSeason7 #BiggBoss7Tamil #BiggBossTamil7#VJArchana #Archana #PradeepAntonypic.twitter.com/yJdgDc96yx