பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறி போட்டியாளர்!! யார் தெரியுமா?
Bigg Boss
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 சண்டை மற்றும் சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இந்த சீசனில் யார் நல்லவர் கெட்டவர் என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர் ரசிகர்கள்.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எவிக்ஷன் நடைபெறவில்லை. அதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் படி இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்ஷன் நடைபெற உள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேறியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றன. அனன்யா ராவ் இந்த சீசனின் முதல் எவிக்ஷனிலேயே வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.