மசாலா பத்தல.. திட்டம் போட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படும் வைல்டு கார்டு
பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பான விஷயங்கள் எதுவுமே நடக்கவில்லை.
அடிதடி சண்டை போட்டுவிட்டு அது prank என ஏமாற்றுவது, முட்டையை பங்கு பிரிப்பதில் தகராறு என ஸ்கூல் பசங்க ரேஞ்சுக்கு தான் ஷோவில் சண்டைகள் நடந்து கொண்டிருக்கிறது.
வைல்டு கார்டு
இந்நிலையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக பலரை களமிறக்க விஜய் டிவி திட்டமிட்டு வருகிறதாம். அவர்கள் வந்தால் ஷோ இன்னும் பரபரப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அர்னாவ் முன்னாள் மனைவி திவ்யா ஸ்ரீதரை வைல்ட் கார்டாக கொண்டுவர இருக்கிறார்களாம்.
ஏற்கனவே அர்னாவ் - அன்ஷிதா இருவரும் ஜோடி தான் என கூறப்பட்டு வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதர் வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும்?
இருப்பினும் திவ்யா ஸ்ரீதர் வருவது பற்றி இன்னும் எந்த உறுதியான தகவலையும் விஜய் டிவி அறிவிக்கவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.