பிக் பாஸ் புகழ் அர்ச்சனா - அருண் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. திடீர் அறிவிப்பு!
அர்ச்சனா - அருண்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை அர்ச்சனா.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜய் டிவி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். தற்போது படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், டிமான்டி காலனி 2 படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார்.
அருண் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.
திடீர் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது அர்ச்சனா - அருண் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அதை அருண் போட்டோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார். தற்போது ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இதோ போட்டோ,