கேவலமாக மெசேஜ் செய்த ரசிகர்கள்!! மனம் நொந்து பேசிய அர்ச்சனாவின் மகள் சாரா...
சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த தொகுப்பாளினி பயணம் தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பணியை தொடர்ந்து வருகிறார் விஜே அர்ச்சனா. 20004ல் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அர்ச்சனா சமீபத்தில் விவாகரத்து எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.
தனக்கு பின் மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தினார். தற்போது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் வழக்கமாக வீடியோவை போட்டு பிரபலமாகினார் சாரா.
என்னதான் சின்ன வயதில் இணையத்தில் ஆக்டிவாக இருந்தாலும் சிலர் ஹேட்டர்கள் சாராவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர். சில வருடங்களுக்கு முன் நடந்த பேட்டியின் சில நிமிட வீடியோவை தொலைக்காட்சி சேனல் வெளியிட்டு அதில் சாராவுக்கு இவ்வளவு மெச்சூரிட்டியா என்ற தலைப்பும் போடப்பட்டு இருந்தது.
இதற்கு சாரா, ஒரு தரப்பினர் எனக்கு போதுமான மெச்சூரிட்டி இல்லை என்றும் இன்னொரு தரப்பினர் அதிகமான மெச்சூரிட்டி இருக்கிறது என்றும் தவறான வார்த்தைகளால் விமர்சித்து ட்ரோல் செய்தனர்.
என் மெச்சூரிட்டி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் சூழ்நிலைகளுடன் நேரடி தொடர்பு கொண்டதாகவும், 8 வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்து 11 வருஷம் அப்பாவுடன் இல்லாமல் வாழ்ந்ததாகவும் மிகவும் எமோஷ்னலாக ஒரு பதிவினை பகிந்துள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.