விஜய் கட்சியில் இணைய போகிறேன்.. அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ் பாலா!!

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 23, 2024 02:30 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். நடிப்பிலும், நடனத்திலும் சிறந்து விளங்கிய இவர் தன் திறமை மூலம் பல கோடி மக்கள் மனதில் இடம் பெற்றார். இந்த நிலையில் அரசியலில் திடீரென நுழைந்த விஜய் தொடர்ந்து அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

விஜய் கட்சியில் இணைய போகிறேன்.. அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ் பாலா!! | Bigg Boss Bala Opposes Dmk

அந்த வகையில் இன்று தன் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். அதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் மூலம் பிரபலமான பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடியான பதிவை எழுதி உள்ளார். பிறகு அந்த ட்வீட்டை டெலிட் செய்தும் உள்ளார்.

அதில், என் தாத்தா மற்றும் பாட்டி எல்லாம் உங்கள் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டாங்க ஆனால் என்ன மாறி விட்டது என்றும், காலம் காலமாக வாரிசு அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது என்றும், தமிழ் நாடு என்ன உங்க சொத்தா என்றும் ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

பாலாஜி முருகதாஸ் 

விஜய் கட்சியில் இணைய போகிறேன்.. அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ் பாலா!! | Bigg Boss Bala Opposes Dmk

மேலும், பாலாஜி முருகதாஸ் திமுக கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் அதுவும் என்னால் என்றும், நான் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பாலாவிற்கு என்ன தான் பிரச்சனை எதற்கு திடீரென இவ்வாறு பேசி உள்ளார் என குழம்பி உள்ளனர். அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் ரசிகர்கள் பாலாஜியை வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.