வித்தியாசமான முறையில் குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் ஷாரிக்.. இது நல்ல இருக்கே
ஷாரிக் ஹாசன்
நடிகர் ரியாஸ் கான் மற்றும் அவரது மனைவி உமா ரியாஸ் கான் ஆகியோர் குணச்சித்திர நடிகர்களாக படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.
இவர்களுடைய மகன் நடிகர் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். இவர் தனது காதலி மரியா ஜெனிபரை கடந்த ஆண்டு கரம்பிடித்தார்.
திருமணத்திற்கு பின், இவர்கள் ஜோடியாக வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது குட் நியூஸ் கூறியிருக்கிறார் ஷாரிக்.
குட் நியூஸ்
அதாவது, தனது மனைவி ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளார். இதற்காக இருவரும் இணைந்து அழகாக போட்டோஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை ஷாரிக் - ஜெனிஃபர் தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,