நான் Lesbianஆ? நெகடிவ் கமெண்ட் குறித்து பிக்பாஸ் 8 ஜாக்குலின் அதிரடி பதில்
ஜாக்குலின்
ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் மக்கள் எதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஆவலாக இருப்பார்கள்.
அப்படி சமீபத்தில் பிக்பாஸ் 8வது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கும் வந்துவிட்டது. இந்த சீசனின் டைட்டிலை மக்கள் மனதை வென்ற முத்துக்குமரன் ஜெயித்துள்ளார்.
இந்த பிக் பாஸ் சீசன் 8 - ல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் சிங்கப்பெண் ஜாக்குலின்.
அதிரடி பதில்
பிக்பாஸ் சீசன் 8 முடிவுக்கு வந்த பின் போட்டியாளர்கள் அனைவரும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜாக்குலினிடம் அவருக்கு வந்த ஒரு கமெண்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது, ரசிகர் ஒருவர் நீ Lesbian ஆ என கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு அவர், ஒரு 3 நண்பர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோ போட்டால் உடனே இது போன்று கமெண்ட் செய்து விடுகின்றனர். அவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு உள்ளது போல" என்று பதிலளித்துள்ளார்.