பிக் பாஸில் இருந்து வெளியேறிய அருண், தீபக் வாங்கிய சம்பளம்..
Bigg Boss
Bigg Boss Tamil 8
Deepak Dinkar
By Kathick
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் அருண் மற்றும் தீபக் ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர்.
இவர்களில் தீபக் வெளியேறியது சற்றும் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், வெளியேறிய இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள தீபக் ஒரு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.
மேலும் அருண் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதுவே இவர்களுடைய சம்பளம் விவரம் ஆகும்.