விஜய் டிவி பிரபலத்துக்கு மனைவியாக தனலக்ஷ்மி.. இந்த ரூட்டில் தான் பிக் பாஸ் வந்தாரா
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதற்காகவே அந்த ஷோவுக்கு போட்டியாளராக செல்ல வேண்டும் என பிரபலங்கள் விரும்புகிறார்கள். அந்த ஷோவுக்கு சென்றால் அதிகம் புகழ் கிடைக்கும் என புதுமுகங்கள் பலரும் போட்டி போடுகிறார்கள்.
இந்த வருடம் நடந்து வரும் பிக் பாஸ் 6ம் சீசனில் தனலட்சுமி என்பவர் போட்டியாளராக வந்து பாப்புலர் ஆகி இருக்கிறார். அவர் டிக் டாக் மூலம் புகழ் பெற்றேன் என தொடர்ந்து கூறி வருகிறார்.
ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ஷோவுக்கு வந்திருக்கிறேன் என தனலட்சுமி தொடர்ந்து கூறி வருகிறார்.
வெப் சீரிஸ்
இந்நிலையில் பிக் பாஸ் வரும் முன்பு தனலட்சுமி விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயனின் மனைவியாக வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். ஒருவேளை அவர் தான் தனலக்ஷ்மிக்கு பிக்பாஸ் செல்ல recommend செய்திருப்பாரோ என நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.
தனலட்சுமி அப்போதே கொடுமைக்கார மருமகளாக நடித்திருக்கிறார். வீடியோவில் பாருங்க