விஜய் டிவி பிரபலத்துடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் பிக்பாஸ் ஜூலி!! ஷாக்காகும் ரசிகர்கள்..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் மரிய ஜூலியானா. அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிப்பரப்பாகி கமல் ஹாசனால் பிரபலமான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக ஜூலி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 5 நிமிட குறும்பட வீடியோவால் அனைத்து பெயரையும் கெடுத்துக்கொண்ட ஜூலி, வெளியில் வந்ததும் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். அதன்பின், ஒருசில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த ஜூலி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.
சில படங்களில் சிறு ரோலிலும் நடித்து வந்தார். தற்போது சீரியல் பக்கம் சென்றிருக்கும் ஜூலி, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சீரியல் நடிகர் ராஜ்குமார் மனோகரணுடன் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக ஜூலி எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ராஜ்குமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


