நன்கொடை கேட்கும் கமல்! பிக் பாஸ் காசெல்லாம் எங்க போச்சு?
Makkal Needhi Maiam
Kamalhaasan
By Parthiban.A
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர். அவர் இந்தியன் 2 படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு இருக்கிறார். அதன் பின் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதற்கிடையில் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் அவர்.
இந்நிலையில் கமல் தான் நடத்தி வரும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு நன்கொடை கேட்டு ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் கமலை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது மக்கள் நீதி மையமா இல்லை மக்கள் நிதி மையமா என கேட்டு வருகின்றனர். மேலும் அரசியல் என்பது உண்டியல் குலுக்குவது இல்லை என அவர் எப்போதோ சொன்னதை வைத்து இப்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
மாட்டிக்கிட்டீங்க ஆண்டவரே pic.twitter.com/pjDSKmWrFZ
— Jagadish (@scbjagadish) February 2, 2022