பிக் பாஸ் ஓவியாவுக்கு இந்த நிலைமையா? கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
ஓவியா
தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
முதல் பட வெற்றிக்கு பின் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.
பட வாய்ப்புகள் குறைய விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவானது.
கடைசியாக இவர் நடிப்பில் பூமர் அங்கிள் என்ற படம் வெளியானது. ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை.
இந்த நிலைமையா?
இந்நிலையில், வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் ஓவியா இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், ஓவியா ஹாலிவுட் நடிகை போல, வெள்ளை நிற உடையில் வலம் வருகிறார். இதை கண்டு ரசிகர்கள் இது தான் ஜிலோபி கொண்டையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.