என்னை நைட்டியில் வரச்சொன்னதே விஜய் டிவிதான்!! காமன் மேன் பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி காட்டம்...

Aari Bigg Boss Vijay Television Gossip Today Maya S Krishnan
By Jai Aug 17, 2026 07:29 AM GMT
Report

காமன் மேன்

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாதாரண மக்கள் கலந்து கொள்வதற்காக காமன் மேன் தேர்வு நிகழ்ச்சி கடந்த சனி, ஞாயிறு நடந்தது.

அந்நிகழ்ச்சியில் நைட்டி அணிந்து வந்து நடுவரால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார் பெண் போட்டியாளர் ஒருவர். தற்போது அந்த பெண் போட்டியாளரான பிரிய வர்ஷினி, விஜய் டிவி மீதும் நடுவர் ஆரி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

என்னை நைட்டியில் வரச்சொன்னதே விஜய் டிவிதான்!! காமன் மேன் பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி காட்டம்... | Bigg Boss Season 10 Female Contestants Claims

அதில் பிரிய வர்ஷினி, இந்த காமன் மேன் நிகழ்சிக்காக கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். இதில் ஏராளமானோர் எலிமினே செய்யப்பட்டு 50 பேர் மட்டுமே தேர்வானார்கள்.

அதிலும் 30 பேரை எலிமினேட் செய்துவிட்டார்கள். இவர்களுக்கு காமன்மேன் என்ற பெயர் மட்டும்தான் வேண்டும், ஆனால் ஷோவுக்கு காமன் மேன் தேவையில்லை. நான் இன்ஸ்டாவில் நைட்டியை நார்மல் என்று வீடியோ போடுபவள்.

என்னை நைட்டியில் வரச்சொன்னதே விஜய் டிவிதான்!! காமன் மேன் பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி காட்டம்... | Bigg Boss Season 10 Female Contestants Claims]

டிஆர்பி ரேட்டிங்கிற்காக

பிக்பாஸ் ஆடிஷனுக்கு செல்லும்முன், வீட்டின் சாதாரண பெண்ணாக நைட்டியில் வரலாமா என்று அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சரி என்று சொல்லியதால் தான் நான் நைட்டியில் சென்றேன்.

இவர்களே என்னை நைட்டியில் வரச்சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் முன் பிரச்சனை பண்ணவே நைட்டியில் வந்தீங்களா? எனூர் கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள். டிஆர்பி ரேட்டிங்கிற்காக எது வேண்டுமானாலும் செய்வார்களா?

நடுவராக இருந்த ஆரி என்னை பார்த்து, குழந்தையா பிறக்கும்போது ஆடையில்லாமல் தான் இருப்போம், அதற்காக வளர்ந்தப்பின் அப்படியே இருக்க முடியுமா? என்று கேட்கிறார். ஒரு பெண்ணை டிவி சேனலில் இப்படி விமர்சித்தால் வெளியில் இருப்பவர்கள் என்னை எப்படி மதிப்பார்கள்.

ஆரி, ஓவியா, மாயா இடையே நடந்த விஷயங்களை அரை மணி நேரமானாலும் அப்படியே அதை ஒளிபரப்பு செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் செய்து என்னை ஒரு கெட்டவள் போலச் சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரியும், மாயாவும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் பிரிய வர்ஷினி தெரிவித்துள்ளார்.