பிக்பாஸுக்கு பின் வேறொரு பிம்பத்தை உருவாக்கிய செளந்தர்யா! என்ன தெரியுமா?
பிக்பாஸ் செளந்தர்யா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த போட்டியாளர் தான் நடிகை செளந்தர்யா.
சீசன் 8ன் ரன்னர் அப் ஆக 2வது இடத்தை பிடித்த செளந்தர்யா, நிகழ்ச்சிக்குப்பி பல விஷயங்களை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சௌந்தர்யாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7-ல் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது சௌந்தர்யா அவரை புரப்போஸ் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறிய வந்த நிலையில் இருவரும் வெளியில் அவுட்டிங் சென்று வந்தனர். அதன்பின் இருவரும் தனியாக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றினை நடத்தியும் வருகிறார்கள்.
சொந்த வீடு
இந்நிலையில் செளந்தர்யாவின் வாழ்க்கையில் மற்றும் ஒரு முக்கிய சாதனையான சொந்த வீடு வாங்கியுள்ளார். அவரின் பதிவில், கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் என்றும் பிக்பாஸ் மூலம் கிடைத்த பணம் இப்போது வேலை செய்கிறது என்றும் கூறி அந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் பிக்பாஸ் செளந்தர்யா.