கோபத்தில் கண்ணாடி கிளாஷை போட்டு மிரட்டிய ஜனனி.. குயின்சியால் வெளிச்சத்திற்கு வரும் உண்மை முகம்..
பிக்பாஸ் சீசன் 6 தற்போது 26 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர் வெளியேறியதை தொடர்ந்து கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து வீட்டிற்குள் அமைதியாகவும் கிடைக்கும் நேரத்தில் சலசலப்புடன் சண்டையும் நிகழ்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே அனைவரையும் கவர்ந்து வரும் இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருகிறார்.
இடையில் தன் முதுகில் குத்துபவர்களுக்கு நான் கோபக்காரி என்று பேசியிருந்தார். தற்போது அவரது சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டி வந்திருக்கிறார் குயின்சி.
ஜனனி தெரியாமல் குயின்சியின் டவலை எடுத்து பயன்படுத்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன்பின் பொருமையை இழந்த ஜனனி வேண்டும் என்று யாராவது செய்வார்களா என்று கையில் இருந்த கிளாஷை தூக்கி வீசி கோபப்பட்டுள்ளார்.
தற்போது ஜனனியின் சுயரூபம் இதுதான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.