பிக்பாஸ் வீட்டில் 95 நாட்கள்!! 16 லட்சத்தை தூக்கிய பூர்ணிமாவின் மொத்த சம்பளம் இவ்வளவா?
Bigg Boss
Star Vijay
Poornima Ravi
By Edward
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கடைசி வரை ஈடு கொடுத்த பூர்ணிமா, பிக்பாஸ் வைத்த 16 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறினார்.
புத்திசாலித்தனமான முடிவு என்று அவரை அப்படி அழைத்தாலும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் இரட்டை எலிமினேட் என்று கூறப்பட்டு இருந்தது.
குறைவான வாக்குக்களை பெற்ற விசித்ரா இந்த வாரம் கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்டு விட்டார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 95 நாட்களாக இருந்த பூர்ணிமாவிற்கு மொத்த சம்பலமாக 14 லட்சம் பெற்றுள்ளராம். ஏற்கனவே 16 லட்சம் பணப்பெட்டியை தூக்கியதால் அவரின் பிக்பாஸ் 7-ன் மொத்த சம்பளம் 30 லட்சமாக பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு கிளம்பி இருக்கிறாராம் பூர்ணிமா.