செளந்தர்யா அப்படி பேசியதால் நெஞ்சு வலி..பிக்பாஸிடம் ராணவை வெளியே அனுப்ப சொன்ன அம்மா...
ராணவ் அம்மா
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 69 நாட்களை கடந்து ஒளிப்பரபாகி வருகிறது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 8 சீசனில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
முதலில் சத்யா எவிக்ட்டாகியதை தொடர்ந்து தர்ஷிகாவும் அவரை தொடர்ந்து வெளியேறியிருக்கிறார். ஆரம்பத்தில் ராணவ் - செளந்தர்யாவிற்கும் இடையே அடிக்கடி பிரச்சனை தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது, ராணவிற்கு எதுவும் தெரியாது, கூமுட்டை, சொன்னா புரியாது என்று அடிக்கடி செளந்தர்யா கூறி வந்துள்ளார். இந்நிலையில் ராணவ் அம்மா ஒரு பேட்டியொன்றில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
ராணவ் அம்மா
ராணவை செளந்தர்யா அவனுக்கு ஒன்னும் தெரியாது, கூமுட்டை என்று அடிக்கடி சொல்கிறார். எந்த இடத்திலாவது செளந்தர்யா ராணவ்விடம் ஏதாவது சொல்லிக்கொடுத்தாங்களா? ஏதாவது விஷயத்தை பற்றி ஒழுங்கா பேசினார்களா? எதுவுமே சரியாக பேசாத செளந்தர்யா என் மகனைப்பற்றி கூமுட்டை என்று சொல்லும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
பொம்மை டாஸ்கில் ஜெஃப்ரி அடுத்தபோது ஆரம்பத்தில் வலிக்கைவில்லை என்று சொல்லி பின் அவனுக்கு கழுத்து வலி வந்தது. அவன் எதுவாக இருந்தாலும் வீட்டில் எதையும் சொல்லவே மாட்டான், எவ்வளவு வலியாக இருந்தாலும் தாங்குவான், அவனால் முடியாத பட்சத்தில்தான் என்னிடம் வலிக்கிறது என்று சொல்லியிருக்கிறான்.
எனக்கு அவனை நல்லாவே தெரியும், அதனால் அவன், இந்நிகழ்ச்சியில் எனக்கு வலிக்கிறது என்று சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்னைக்கு முழுக்க நான் தூங்காம இருந்ததால் எனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது.
அதன்பின் என் கணவரிடம் சொல்லி பிக்பாஸிடம் பேசி என் மகனை வெளியே அனுப்பிவிடுங்க என்று கேட்டோம். அவங்க அதற்கு முடியாது என்று சொல்லியதாக ராணவ் தாயார் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.