பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போது?.. தொகுப்பாளர் இவரா?

Kamal Haasan Vijay Sethupathi Bigg Boss
By Bhavya Jul 26, 2025 06:30 AM GMT
Report

பிக்பாஸ்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக வலம் வருகிறது பிக்பாஸ்.

100 நாட்கள் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், விதவிதமான டாஸ்க், வியக்க வைக்கும் வீடு, மாஸான தொகுப்பாளர் என இதில் உள்ள அனைத்துமே பிரம்மாண்டம் தான்.

கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது, அதன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், அந்த முடிவை மக்களும் கொண்டாடினார்கள்.

பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போது?.. தொகுப்பாளர் இவரா? | Bigg Boss Tamil Launch Date Details

 எப்போது?

தற்போது, அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, புதிய சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இம்முறையும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்த மாதம் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள், தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     

பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போது?.. தொகுப்பாளர் இவரா? | Bigg Boss Tamil Launch Date Details