பிக்பாஸ் சீசன் 9..பாக்க பாக்க புரியும்..போகப்போகத்தான் தெரியும்!! விஜய் சேதுபதி பிரமோ..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியின் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் பரவி வரும் நிலையில், விஜய் சேதுபதியின் ஒரு பிரமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி பிரமோ
அதில், விஜய் சேதுபதி எதுவுமே புரியலையே என்று ஆரம்பத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் சிசன் 9, பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும் என்று கூறியபடி எடுத்த வீடியோவை இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அப்படி என்னதான் பிக்பாஸ் சீசன் 9ல் மாற்றம் செய்திருப்பார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்டும் வருகிறார்கள்.