8 லட்சத்துக்கு ஆசைப்பட்டு எவிக்ட் ஆன ஜாக்குலின்!! 101 நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் 8 பணப்பெட்டி
இறுதி வாரத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 8ல் தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுவும், இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்காத வகையில், பணப்பெட்டியை எடுக்கும் நபர், போட்டியை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வீட்டிற்கு வெளியே இருக்கும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வரவில்லை என்றால், அந்த போட்டியாளர் வெளியேறிவிடுவார். முதல் நபராக களமிறங்கி ரூ. 50,000 கைப்பற்றினார் முத்துக்குமரன். அவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய ரயான் மற்றும் பவித்ரா ரூ. 2 லட்சத்தை எடுத்தார்.
101 நாட்கள் சம்பளம்
இவர்களை தொடர்ந்து பணப்பெட்டியை எடுக்க சென்ற ஜாக்குலின், பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணப்பெட்டிக்காக ஆசைப்பட்டு வெளியேறினாலும் ஜாக்குலின் 14 வாரங்கள் அதாவது 101 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அப்படி 101 நாட்கள் வீட்டில் இருந்ததற்காக மொத்த ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்று வெளியேறியிருக்கிறார்.