5 வருடமாக இது நடக்கவில்லையா! பிக்பாஸ் அனிதா சம்பத்தின் ஆதங்கம் இதுதானாம்..
தொலைக்காட்சி பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரை அளவிற்கு பெரியளவில் பேசப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத்.
பின் அதில் கிடைத்த வரவேற்பால் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கணவரின் புகழ் பாடி பேசி வந்த நிலையில் பல விமர்சனங்களை சந்தித்தார். இணையத்தில் அவரை கலாய்த்தும் கிண்டல் செய்தும் விமர்சித்து பதிவுகளை போட்டு வந்தனர் நெட்டிசன்கள். தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடனமாடி வருகிறார்.
இந்நிலையில், தன் கணவர் பற்றி சில முக்கிய கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத். அதில், கடந்த 61 மாத காலங்களாக என்னிடம் நீ ஐ லவ் யூ என்ற வார்த்தையை கூறவே இல்லை. சீக்கிரம் ஐலவ்யூ சொல்லி தொல என்றும் 5 வருஷமாக காத்திருக்கிறேன் என்று உருக்கமாக பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத்.