வீட்டை விட்டு வெளியேறிய அனிதாவின் முதல் பதிவு.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கடந்த வாரம் வெளியேறியவர் தான் அனிதா சம்பத். பிரபல செய்தி டிவியில் செய்திகள் வாசித்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவரைக் கூட்டிக்கொண்டு வந்து வச்சு செய்துவிட்டது பிரபல தொலைக்காட்சி சேனல். அனிதா நினைத்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக நாளுக்கு நாள் ரசிகர்கள் அனிதாவை பிக்பாஸ் வீட்டை விட்டு விரைவில் வெளியேற்றுமாறு சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர்.
ஏன், கமலஹாசன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடத்தில் கூட அனிதாவை தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளது.
கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனைத்திற்கும் நன்றி என பதிவு போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா சம்பத், எப்போது தன்னுடைய கணவர் வீட்டை விட்டு வெளியேற போகிறார்? எனவும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா ரசிகர்களின் கிண்டல்களை தாங்க முடியாமல் ட்விட்டரை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.