அந்த விசயத்தில் எனக்கு அவரை பிடிக்காது அர்ச்சனா தான்.. ஆனா, உண்மையை கூறிய பிக்பாஸ் பிரபலம் நிக்ஷன்..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கடந்த ஜனவரி 14 ஆம் தேதி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையோடு கோப்பையை கைப்பற்றி இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சி எடுத்து வரும் பேட்டியில் அர்ச்சனா, மணியை தொடர்ந்து தற்போது நிக்ஷன் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், உண்மையா? பொய்யா? யார் இருந்தார்கள் என்ற கேள்விக்கு, யாராலும் கடைசி வரை பொய்யாக இருந்துவிட முடியாது. உண்மை இருப்பாங்க என்றும் சொல்ல முடியாது. சில இடங்களில் உண்மையாக, சில இடங்களில் பொய்யாக இருந்திருக்கிறார்கள்.
யார் வலிமையான போட்டியாளர்
வீட்டில் இருக்கும் போது யார் வலிமையானவர்கள் என்று தெரியாது. எதை வைத்து முடிவெடுப்பீர்கள் என்று டாஸ்கில் யார் வலிமையானவர், பேச்சுத்திறமையில் யார் வலிமையானவர், வார இறுதியில் கிளாப்ஸ் வாங்குபவர்களையா? என்பது யாருக்கும் தெரியாது. அப்படியென்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்டு வெற்றிப்பெற்ற அர்ச்சனா அக்கா தான் வலிமையான போட்டியாளர் என்று கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு படிக்கட்டில் இருக்கும் போது ஒருவொரு நபரை சந்திப்போம். அப்படி தான் இங்கிருக்கும், பலவிதமான கலை சார்ந்தவர்கள், அவர்கள் தேவைக்காக, கேமராவுக்காக அவர்கள் நடந்து கொண்டதை, 23 வயதில் எந்த தப்பான காரணத்தையும் கூற முடியாது என்ற அளவிற்கு பல விசயங்களை பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்டதாகவும் குறைகளை எடுத்துக்கொண்டேன்.
எனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்றால் அது மாயா தான். விளையாட்டா பார்க்கும் போது தெரியாது, ஒரு கலைஞரா எனக்கு அவரை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் நிக்ஷன். எனக்கு போதும் போதும் என்றளவிற்கு இருந்தது நான் ஜெயித்த மாதிரிதான்.
என் எலிமினேஷன்
இதுவே போதும் என்ற நிலை தான் வந்தது. பிக்பாஸ் 7ல் நேர்மையாக விளையாடியவர்கள் என்றால் அது யாரும் கிடையாது. ஏதோ ஒரு நிலையில் அவர்களின் கோட்பாட்டில் இருந்து மாறினார்கள், யாரும் உண்மையாக இல்லை. பிக்பாஸ் பிறகு சில பாடல்களை எழுதி வருகிறேன். படமும் பண்ண கமிட்டாகி இருக்கிறேன்.
என் பார்வையில் என்னை வெறுப்பவர்கள், முதல் இரு வாரத்தில் பார்த்துவிட்டு நன்றாக வருவான் என்று நினைத்தார்கள். நீ போய் இப்படி செய்துவிட்டியே என்று அவர்களின் கோபம் வந்திருப்பது போல் தான் நான் பார்க்கிறேன் என்று நிக்ஷ தன் ஹேட்டர்ஸ் பற்றி பகிர்ந்துள்ளார்.