இதுதான் என் கேரக்டர்! அம்மாவிடம் இப்படியொரு தவறு செய்த பிக்பாஸ் ராஜு!

raju biggbosstamil5 bb5
By Edward Dec 31, 2021 10:50 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 89 நாட்களை தாண்டி இறுதி கட்டத்திற்கு சில வாரங்களில் செல்லவிருக்கிறது. இந்நிலையில் டிக்கெட் டு ஃபினாலே போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது ராஜு தான் செய்த தவறுகளையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் எதை எடுத்து செல்வேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். அதில் ராஜு கூறியது, நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து கற்றுக்கொண்டது என் வீட்டில் எல்லொரிடமும் பேச வேண்டும்.

என் அம்மாவிடம் சாப்பிட்டீங்களா, சாப்பிட்டேன் என்று மட்டும் தான் பேசுவேன். மற்றபடி எதையும் நான் கேட்டதில்லை, இனி நான் அவர்களிடம் பேச வேண்டும் என்பதை நான் இங்கிருந்து எடுத்துச்செல்கிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.