தந்தையின் செல்வாக்கில் திமிராக இருக்கிறேனா? பிக்பாஸ் சக்தியின் பரிதாப நிலை..

accident biggboss pvasu sakthi
By Edward Aug 06, 2021 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முனனணி இயக்குநராக மிகப்பெரிய படங்களை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றவர் பி வாசு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திரமுகி 2 வை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. அவருக்கு அடுத்தபடியான அவரது மகன் சக்தியை தொட்டால் பூ மலரும் படத்தில் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

சில படங்களில் நடித்து வந்த சக்தி பெரியளவில் பேசப்படாமல் வாய்ப்புகள் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கல்ந்து கொண்டார். அதை பயன்படுத்த தவறியும் அதன்பின் வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் குடித்துவிட்டு கார் ஓடி விபத்து ஏற்படுத்தி விவகாரத்தில் வீடியோ லீக்காகி அவரின் பெயரை கெடுத்தது.

தன் தந்தையின் பெயரும் அதற்கு பெரிய இழப்பினை தந்திருந்தது. சமீபத்தில் பேட்டியளித்த சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் எனக்கு இப்படி ஆனது என்று கூறியுள்ளார். என்னை அறியாமல் பல தவறுகள் செய்தேன். அதுலிருந்து தற்போது படிபடியாக மீண்டு வந்துள்ளேன். சிலர் என்னை தந்தையின் செல்வாக்கில் திமிராக இருக்கிறேன் என்று கூறினார்கள்.

மெச்சுரிட்டி இல்லாமல் வாழ்ந்த நான் 12 படங்களை மிஸ் செய்திருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன் என்று ஆதங்கமாக கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பெண் ரசிகைகள் இருந்தார்கள் என்னிடம் பேசினார். ஆனால் தற்போது என்னிடம் ஓவியா மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.