பிக்பாஸ் 5 ஃபினாலே எப்படி இருக்கும்! இவர்தான் வின்னரா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும்ம் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 5 சீசன் 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில் வரும் பொங்கல் 16ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறவுள்ளது. ராஜு, பிரியங்கா,ம் நிரூப், பாவ்னி, அமீர் போன்ற 5 பேர் ஃபினாலேவிற்கு சென்றுள்ளனர்.

தற்போது எலிமினேட்டான போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஃபினாலே நிகழ்ச்சி எப்படி நடக்கவுள்ளது என்ற செய்தி வெளியாகவுள்ளது.

105 நாட்கள் நிறைவடைந்து 106 ஆம் நாளில் நடைபெறும் இறுதி போட்டிற்கு சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கப்படவில்லையாம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இப்படியான முடிவினை எடுத்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் பார்க்கமுடியும். கடைசி சீசன் டைட்டிலை கைப்பற்றிய ஆரி பிக்பாஸ் 5 ஃபினாலேவிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் தற்போதைய வாக்கின் அடிப்படையில் ராஜு வின்னராகலாம் என்றும் பிரியங்கா ரன்னர் ஆகலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்