ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை இருக்கட்டும்!! சிக்கலை சந்தித்த விஜய் படங்கள் என்னென்ன?
Vijay
JanaNayagan
By Edward
ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வருகிற 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கிடையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வராததால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்ககோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதன்பின் பட ரிலீஸை ஏன் 10 ஆம் தேதிக்கு தள்ளிப்போடக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியதோடு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது.
படம் 9 அம தேதி ரிலீஸ் ஆகுமா? அல்லது 10 ஆம் தேதி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதேபோல் ரிலீஸுக்கு முன் சிக்கல்களை சந்தித்த விஜய் படம் என்ன என்ன என்று பார்ப்போம்...

சிக்கலை சந்தித்த விஜய் படங்கள்
- 2003ல் இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான புதிய கீதை படம் ரிலீஸுக்கு முன், கிறிஸ்தவரான விஜய் படத்திற்கு எப்படி கீதை என்ற பெயர் வைக்கலாம் என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தப்பின் தான் புதிய கீதை என்று பெயர் மாற்றப்பட்டு ரிலீஸானது.
- சுறா படத்தால் திரையரங்க உரிமையாளர்க்ளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தியதால் 2011ல் விஜய், அசின் நடிப்பில் வெளிவந்த காவலன் படத்தினை ரிலீஸ் செய்யவிடாமல் வழக்கு தொடர்ந்தனர். நஷ்டஈடு கொடுத்தால் தான் படம் வெளியாகும் என்ற நிலைக்கு சென்றதால் அதை வழங்கி படத்தை ரிலீஸ் செய்தனர்.
- ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியதாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன்பின் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டப்பின் தான் துப்பாக்கி படம் ரிலீஸானது.
- விஜய் நடிப்பில் 2013ல் உருவான தலைவா படத்தின் டைட்டில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தலைவா படத்திற்கு தடை விதித்தார். பின் விஜய், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அனுமதி பெற்று 11 நாட்கள் கழித்து படத்தை ரிலீஸ் செய்ததனர்.

- ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கத்தி படம் உருவானது. லைகா நிறுவனத்தின் உரிமையாளரும் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜாபக்சேவும் நெருக்கமானவர்கள் என்பதால் படம் வெளியிட தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின் பிரச்சனை தீர்ந்தப்பின் படம் ரிலீஸானது.
- விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் உருவான புலி படத்தின் ரிலீஸின் போது பட தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித்துறையின் சோதனை நடத்தியதால் படம் ரிலீஸாவது தள்ளிப்போனது.
- அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ல் வெளியான தெறி படம் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே வணிகரீதியாக பிரச்சனை ஏற்பட பல திரையரங்குகளில் அப்படம் வெளிடவில்லை.
- 2017ல் வெளியான மெர்சல் படத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி விமர்சிக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டு ரிலீஸ் தேதிக்கு முந்திய நாள் வரை சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கப்பட்டது.
- கதை திருட்டு பிரச்சனையில் சிக்கிய சர்கார் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல் அரசு கொடுக்கும் இலவசங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது.
- பிகில் படத்தின் போஸ்டரில் விஜய் இறைச்சி வெட்டும் கட்டையில் கால் வைத்திருக்கும் காட்சி வியாபாரிகளுக்கிடையே எதிர்ப்பு கிளம்பியது.
- நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் போது அதேநாளில் கேஜிஎஃப் படம் ரிலீஸாக இருந்ததால் பீஸ்ட் படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- வாரிசு படத்தின் ரிலீஸின் போது அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாக விஜய் படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.