கொலை செய்யப்பட்ட தாய்! பிக்பாஸ் 5 அமீருக்குள் மறைந்திருக்கும் உண்மை சம்பவம்..

television biggbosstamil5 amir untoldstory
By Edward Dec 16, 2021 10:58 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசனில் முதல் வைல்ட் கார்ட்டில் அறிமுகமாகி வீட்டிற்குள் சென்றவர் அமீர். இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அமீர் ஒரு நடன கலைஞராவார். தற்போது அவருக்கும் பாவனிக்கும் காதல் கிசுகிசு ஆரம்பித்துள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், அமீர் குடும்பம் பற்றிய சில செய்திகள் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. அமீருக்கு ஒரு வயது இருக்கும் போதே அவருடைய தந்தை வீட்டை விட்டு சென்றுவிட்டாராம்.

அதன்பின் ஊட்டியில் 10ஆம் வகுப்பு படிக்கும் போது அமீரின் அம்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டு மரணமடைந்தார். 16 வயதுக்குள்ளே இருவரையும் இழந்து காவல் நிலையம் என சுற்றித்திருந்திருக்கிறார் அமீர்.