ரச்சிதா வாழ்க்கையில் நடந்த சோகம்!! அம்மாவை நினைத்து கதறி அழுத பிக்பாஸ் ரச்சிதா..
விஜய் தொலைக்காட்சி சேனலில் 70 நாட்களுக்கும் மேல் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்த்திராத போட்டியாளர் இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி வீட்டினை விட்டு வெளியேறினார்.
அதன்பின், விட்டில் தற்போது சோகக்காட்சியாக மாறியிருக்கிறது. அதாவது தங்களுக்கு இருக்க்கும் சோக நிகழ்வுகளை எழுதி சக போட்டியாளர்கள் கூடியிருக்கையில் படிக்க வேண்டும்.

அந்தவகையில் நடிகர் ரச்சிதா தன் அம்மாவை நினைத்து கதறி அழுதுள்ள பிரமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
தனக்கு குழந்தை அமைப்பு இருக்குமான்னு தெரியாது ஆனா உனக்கு நான் எனக்கு நீ என்று அம்மாவை நினைத்து கதறி அழுதுள்ளது போட்டியாளர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்துள்ளது.
இதற்கு காரணம் திருமணத்திற்கு பின் கணவரை விட்டு பிரிந்து வாழக்காரணம் குழந்தை பெற்றுக்கொடுக்காத காரணம் தான்.
இதனால் தனிமையில் வாழ்ந்து வரும் ரச்சிதாவுக்கு உறுதுணையாக இருப்பது அம்மா என்பதால் ரச்சிதா இப்படி உருக்கமாக பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.