பிக்பாஸ் 7ல் கலமிறங்கும் 33 வயதான மலேசிய பெண் நிலா!! இதையெல்லாம் அனுபவிச்சி இருக்காரா!!
பிக்பாஸ் 7 சீசன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க அக்டோபர் 1 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் துவங்கவுள்ளது. பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் கசிந்து வருகிறது.
எப்படியாவது வெளிநாட்டு தமிழ் வாழ் போட்டியாளர்களை பிக்பாஸ் கலமிறக்குவது வழக்கம். அப்படி நிலா என்கிற மலேசிய வாழ் மாடல் நடிகையை தற்போது கலமிறக்குகிறார்களாம்.
33 வயதான நிலா, மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தக்கத்தில் தன் பெயரை பதித்திருக்கிறார். ஒரே டிராமாவில் பல கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறாராம்.
ஏற்கனவே செவிலியராகவும் பணியாற்றிய நிலா சினிமாத்துறையில் பெண்களை ஒரு பாலியல் பொம்மையாக மரியாதை குறைவாக நடத்தும் போக்கு இருக்கிறது என்றும் பல சீண்டல்களுக்கு அடிப்பணீயாமல், நேர்மையான உழைப்போடு மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
