பிரியங்கா சொன்னது எல்லாமே பொய்? உண்மையை உடைத்த தாமரை..

anitha priyanka television biggbosstamil5 biggbossultimate thamrai
By Jai Feb 09, 2022 09:20 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் கடந்த மாதம் முடிந்து ராஜு வெற்றியாளராகவும் பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அந்நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த சில வாரங்களில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் துவங்கியது. அதில் தாமரைச்செல்வியும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா பற்றிய உண்மையும் அவரின் சுயரூபத்தை பற்றியும் தாமரை அனிதாவிடம் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் 5 சீசன் முடிந்து வீட்டிற்கு போனதில் இருந்து பிரியங்கா என்னை கண்டுகொள்ளவில்லை. அவர் பெரிய பிரபலம் என்பதால் அவரின் நம்பர் என்னிடம் இல்லை.

அவர் நினைத்திருந்தால் என்னிடம் கால் செய்து பேசியிருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவே இல்லை. அக்கா அக்கா என்று நிகழ்ச்சியில் கூறியது எல்லாமே பொய். பிக்பாஸ் பினாலேவில் கூட நான் சென்று பேசினாலும் என்னிடம் சரியாக பேசவில்லை.

வீட்டில் இருக்கும் போது இங்கே கூட்டில் செல்வேன் இப்படி அப்படி மாற்றுவேன் என்று வார்த்தை சாடம் பேசினாராம் பிரியங்கா. நான் அவரை என் குடும்பமாக தான் பார்த்து பேசினேன். பசிக்குது என்று கூறினால் கூட என்னால் தாங்க முடியாது.

அக்ஷரா வீட்டுக்குள் சொன்னதை பிக்பாஸ் முடிந்தும் அதை செய்தார். எனக்க் ஆடை வாங்கி அனுப்பினார் மற்றும் வெளியில் வந்து பேசினார். இப்படி அன்பு காட்டி ஏமாற்ற இனி முடியாது நான் என்னுடைய கேம் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் தாமரைச்செல்வி.