6 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து!! மாஜி கணவர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆர் ஜே வைஷ்ணவி.
ஆர் ஜேவா பணியாற்றி பிரபலமான வைஷ்ணவி வல்லவன் படத்தில் சில காட்சியில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் 2016ல் நீண்டகாலமாக காதலித்து வந்த அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வீடு திரும்பினார். கணவருடன் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வைஷ்ணவி தற்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டோம்.
ஆனால் இருவரும் நண்பர்களாகவே நீடிப்போம், அதுதா சரியாக இருக்கும் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம் என்பதையும் கூறியுள்ளார்.
பிரிவதற்காக இருவரும் வருத்தப்படவில்லை என்றும் சூழ்நிலை காரணமாக விவாகரத்து செய்துள்ளோம் என்றும் தெரிவித்து அவருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.
After 6+ years together, @a_flyguy and I have decided to part ways. I still love him just as much but after much deliberation we both have decided that it is best we both do what allows us to be ourselves without the pressure of a relationship pic.twitter.com/ihQMzft8P1
— Valia (@Vaishnavioffl) August 14, 2022