செளந்தர்யாவை காதலிக்கிறது உண்மை தான்.. ஆனால் கல்யாணம்!! அதிர்ச்சி கொடுத்த நடிகர் பிக்பாஸ் விஷ்ணு..
பிக்பாஸ் 94 நாட்கள்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு செல்கிறது. 94 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ராணவ், மஞ்சுரி இருவரும் கடந்தவாரம் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனைதொடர்ந்து முதல் டிக்கெட் டூ ஃபினாலே போட்டியாளராக ரயான் தேர்வு செய்யப்பட்டார்.
விஷ்ணு - செளந்தர்யா
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் நடந்த ஃபீரீஸ் டாஸ்க்கில் செளந்தர்யாவிற்காக பிக்பாஸ் நடிகர் விஷ்ணு உள்ளே சென்றார். விஷ்ணுவுக்கு செளந்தர்யா முதன்முதலில் ஃபிரபோஸ் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், செளந்தர்யாவுடன் காதல் பற்றிய விளக்கத்தை விஷ்ணு ஓப்பனாக பேசியிருக்கிறரர்.
அதில், சௌந்தர்யாவோட ஃப்ரண்டா சாதாரணமாகத் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றேன். அதற்கு மேல் அங்க நடந்தது எல்லாம் எதிர்பாராதது. வெளியில சிலர் சொல்லக்கூடும், இதெல்லாம் ஸ்கிரிப்ட், டி.ஆர்.பி.க்காக எதையாச்சும் பண்ணுவாங்க என்று. ஆனா ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’னு ஒரு பொண்ணு ஊர் அறிய கேட்பதை அப்படி எடுத்துக்கக் கூடாது.
கல்யாணம்
அதனால், இப்ப சொல்கிறேன், ஆமாம், நாங்க காதலிக்கிறோம். இப்பதான் முறைப்படி சொல்லியிருக்கோம், அதனால் கொஞ்ச நாள் காதலர்களாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரமே கல்யாணம் செய்துக்குவோம், அதாவது மேக்சிமம் இந்த வருட கடைசிக்குள் என்று பிக்பாஸ் விஷ்ணு ஓப்பனாக பேசியிருக்கிறார்.