பிக்பாஸ் 8 குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா!! இதெல்லாம் செய்றாரா?
பிக்பாஸ் 8
விஜய் டிவியில் கடந்த 77 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பிரமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் என்று சொன்னாலே அவரின் குரலுக்கு மயங்காத ஆளே இருக்கமாட்டார்கள். மற்ற மொழி பிக்பாஸ் குரலைவிட தமிழில் வரும் பிக்பாஸ் குரல் தான் மிகப்பெரிய ஈர்ப்பு அதிகம்.
பிக்பாஸ் குரல்
அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரானவர் தான் சாஷூ சதிஸ் சாரதி. பிக்பாஸ் முதல் சீசன் முதல் 8வது சீசன் வரை இவர் தான் குரல் கொடுத்து வருகிறார். நடிகராகவும், ஃபிட்னஸ் எந்தூசியஸ்ட், லைஃப் கோச் உள்ளிட்ட திறமைகளை கொண்டுள்ளார் சாஷூ. அவரின் பழைய ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.