பிக் பாஸ் வீட்டில் இப்படி எல்லாம் நடக்குதா? பாக்குற நம்மள இப்படி ஏமாத்துறாங்களே
பிக் பாஸ் ஷோ என்றாலே போட்டியாளர்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்து, அவர்கள் இடையே நடக்கும் சம்பவங்களை ஷூட் செய்து ஒரு மணி நேர ஷோவாக எடிட் செய்து ஒளிபரப்புவது தான்.
அதனால் எடிட்டிங்கில் பல காட்சிகள் வராமல் போய்விடுகின்றன என பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியில் வந்த பிறகு புகார் கூறி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் ஆன இசைவாணியும் அதே புகாரை தான் கூறி இருந்தார்.
மேலும் ஒரு முக்கிய தகவலும் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது. அது என்னவென்றால் தினமும் பிக் பாஸ் வீட்டில் போடப்படும் வேக்கப் சாங் எப்போதும் மூன்று முறை ஒளிபரப்படுமாம்.
போட்டியாளர்கள் எழுந்து வெளியில் வந்து டான்ஸ் ஆடும் footage வேண்டும் என்பதால் தான் இப்படி ஒரு விஷயத்தை அவர்கள் செய்கிறார்களாம். இது இத்தனை நாள் தெரியாமல் ஏமாந்துவிட்டோமே என நெட்டிசன்களும் அது பற்றி கருத்து கூறி வருகின்றனர்.
4 times they will play nu Kasthuri soluchu
— nila kumar (@sakthisivan12) November 30, 2021