கடைசி நிமிடம் வரை அனிதாவை கதறவிட்ட பிக்பாஸ்.. கோடான கோடி கும்பிடு போட்டு அனுப்பிய ரசிகர்கள்!
தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிக்கே பெரும் டிஆர்பியை கொண்டு, ரசிகர்களை குவித்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அனைத்து தரப்பினையும் கவர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளுக்கு நாள் தன்னுடைய விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
85 நாட்களை கடந்து சென்று, சில போட்டியாளர்கேவீட்டில் இருந்து வருகிறார்கள். மேலும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து செய்தி வாசிப்பாளரான அனிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதோடு, கடைசி நிமிடம் வரை அனிதாவை கதற விட்டிருக்கிறார் பிக்பாஸ். அதாவது பல வாரங்களாக நாமினேஷன்களில் சிக்கிய அனிதா வீட்டிலிருந்து வெளியே வராமல் தப்பித்துக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் இந்த வாரம் ஓவரா ஆட்டம் போட்டதால் வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்ங்கள் மட்டுமல்லாமல், வெளியே இருந்த பிக்பாஸ் ரசிகர்களும் பெருமளவில் கடுப்பாகி இருந்தனர்.
இதன் காரணமாக மக்கள் அனிதாவிற்கு குறைந்த ஓட்டுகளை அளித்துள்ளனர். அதனால் தான், அனிதா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், பிக் பாஸ் கொடுத்த உண்டியலை உடைக்க சொன்ன போது அனிதா, அதை உடைக்க மறுத்ததோடு, அதை தனது கணவராக நினைப்பதாக கூறினார்.
அதில் உள்ள காயின்களை ஏற்கனவே வெளியே எடுத்தும் வைத்திருந்தார். மேலும் பிக் பாஸ் வற்புறுத்தியும் அனிதா அந்த உண்டியலை உடைக்க மறுத்ததால், வீட்டின் கேப்டனான பாலாவை அந்த உண்டியலை உடைக்கச் சொன்னார் பிக்பாஸ்.
அப்போது அனிதாவின் உண்டியலில் விரிசல் ஏற்பட்டதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார் அனிதா.
எனவே, வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் கூட அனிதாவை பிக்பாஸ் கதறவிட்ட நிகழ்வு, ரசிகர்களிடையே பெருமளவு பேசப்பட்டு வருகிறது.