பிக் பாஸ் 9 எவிக்ஷனுக்கு முன்பே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!! இவர் தான்..
பிக் பாஸ் 9
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 9. தற்போது 5 நாட்கள் ஆகிய நிலையில் 20 போட்டியாளர்களுக்கிடையே போட்டிகள் சண்டைகள் கடுமையாக நடந்து வருகிறது.
இந்த வாரம் அதாவது நாளை சனிக்கிழமை முதல் வார எவிக்ஷனுக்கான ஷுட்டிங் நடைபெறவுள்ளது. சில சீசன்களில் முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிப்பார்கள். அந்தவகையில் இந்த சீசனிலும் அப்படியான எவிக்ஷன் இருக்குமா என்று நாளை மாலை தெரியவரும்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்
இந்நிலையில், தற்போது பெரியதொரு அதிரடி, முதல் வாரத்தில் நடந்துள்ளது. அதுவும் முதல் எவிக்ஷனுக்கு முன்பே இப்படியொரு அதிரடி வெளியேற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் நந்தினி தான் இன்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேற்றிருப்பதாக பிக்பாஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நந்தினி
நந்தினியை பொறுத்தவரை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல், ஒருவிதமான மனநிலையில் இருந்து வந்ததாகவும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த நந்தினி பிக்பாஸ் வீட்டிற்க்குள் அழுது அரகேற்றியதும் அவரை சக போட்டியாலர் கனி திரு தேற்றியதையும் அனைவரும் வீடியோ மூலம் பார்த்திருக்கிறோம்.
நிகழ்ச்சி தொடக்க முதல் வாரமாகியும் சக போட்டியாளர்களுடன் மிங்கிள் ஆகி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்ள அவர் தயாராகவில்லை என்பதால் நந்தினியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளாராம். இந்த தகவல் இன்று இரவு அல்லது நாளை பிக்பாஸ் முறைப்படியான தகவலை அறிவிப்பார் என்று தெரிகிறது.
#BiggBoss9Tamil #BiggBossSeasonTamil9
— Jone Evangeline (@JoneEvangeline) October 10, 2025
Idhula ena medication yedukura mari iruku? Idhuku yen odane velila anupunga la neriya post pathen.. Already indha mari contestant oru ssn la irundhu title eh vangitu ponanga.. #Nandhinipic.twitter.com/bPh1Ovbe2H