சண்டிகர் தொழிலதிபருடன் திருமணம்!! ஹனிமூன் பற்றி உண்மையை கூறிய நடிகை திரிஷா..
திரிஷா திருமணம்
2001ல் மிஸ் இந்தியாவில் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதினை பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்து தற்போது தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை திரிஷா.
25 ஆண்டுகளாக தன்னுடைய இளமையான, வசீகரிக்கும் தோற்றத்தால் தன்னுடைய ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை திரிஷா, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
திரிஷாவின் பெற்றோகள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் அவரின் வருங்கால கணவர் பஞ்சாபில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர் என்பதும் ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களை அவர் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில், இணையத்தில் பகிரப்பட்டு வந்த இந்த தகவல்களை பார்த்து நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், 'என்னுடைய வாழ்க்கையை மக்கள் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், எனது ஹனிமூனையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள்' என்று கூறியிருக்கிறார் திரிஷா.
இதன்மூலம் இணையத்தில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று வெளிப்படையாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திரிஷா.
