பிக்பாஸ் தனலட்சுமி அம்மாவுக்கு என்ன ஆச்சு!! நேரலையில் அவரே கூறிய உண்மை தகவல்..
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் மணிகண்டன் எலிமினினேட்டாகி வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார்.
தனலட்சுமி எலிமினினேட்
அவருக்கு முன்தின வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். யாரும் எதிர்ப்பாரத வண்ணம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. வீட்டைவிட்டு வெளியேறியதும் விஜய் தொலைக்காட்சி எடுக்கும் நேரலையில் தனலட்சுமி பங்கேற்கவில்லை.
இதற்கு தனலட்சுமி வைல்ட் கார்ட்டில் உள்ளே வருவார், விஜய் டிவியுடன் பிரச்சனை என்று பல செய்திகள் வெளியானது. இந்நிலையில், நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இரு வாரம் கழித்து விஜய் டிவிக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.
பேட்டி
ஏன் பேட்டிக்கு வரவில்லை என்று தனலட்சுமி கூறியுள்ளார். அதில், இத்தனை நாள் வராததற்கு காரணம் அம்மாவிற்கு ஒரு பிரச்சனை என்றும் அதெல்லாம் முடித்துவிட்டு வர கொஞ்சம் நாட்கள் தேவைப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற கேள்விக்கு அசீம் என்றும் பிடிக்காத நபர் யார் என்ற கேள்விக்கு விக்ரமன், ஏடிகே என்றும் ஓப்பனாக கூறியுள்ளார். அமுதவாணனின் உண்மை முகம் இன்னும் வெளிக்காட்டவில்லை என்றும் அந்த பேட்டியில் பிக்பாஸ் தனலட்சுமி கூறியுள்ளார்.