ஜிபி முத்துவின் உண்மை முகம் இதுதான்.. நாரதர் வேலையால் வெளிச்சத்திற்கு வந்த சுயரூபம்

Bigg Boss GP Muthu
By Edward Oct 12, 2022 11:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 6.

20 போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் யூடியூப் பிரபலமான ஜிபி முத்துவும் கலந்து கொண்டுள்ளார். ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக சென்ற ஜிபி முத்து பயந்து நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலானது. அதேபோல் கமல் ஹாசன் சொன்ன அறிவுரையில், என்னது ஆதாம்-ஆ? என்ற ஜிபி முத்துவின் ரியாக்ஷன் இணையத்தில் படுவைரலானது.

இந்நிலையில் ஜிபி முத்துவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த நிலையில் அவருக்கென்று பல ஆர்மி குரூப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என்றும் இப்போது அவர் நாரதர் வேலையை பார்த்து வருகிறார் என்றும் சக போட்டியாளர் தனலட்சுமி கேமெரா முன் பேசிய வீடியோ பிரமோவாக வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஜிபி முத்துவின் செயல்பாடுகள் நாரதர் வேலையாக இருப்பதால் அவரது டீம் குழுவினரை நாரதர் டீம் என்று மற்ற டீமேட் கலாய்த்து வருவதால் தான் தனலட்சுமி இப்படியாக பேசக்காரன் என்று பலர் கூறி வருகிறார்கள்.