என்னை அடிச்சி சாகடிச்சி இந்த இடத்தை எடுத்துக்கோங்க!! பிக்பாஸில் பிரதீப்பின் வெறித்தனம்..
பிக்பாஸ் 7 சீசன் 25 நாட்களை கடந்த நிலையில், கடந்த வாரம் விஜய் வர்மா எலிமினேஷ் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். வரும் 28 ஆம் தேதி 5 போட்டியாளர்களை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்பப்போவதாக கமல் ஹாசனின் பிரமோ வீடியோவில் கூறப்பட்டது. யார் அந்த 5 பேர் என்று பலர் யூகித்தும் வருகிறார்கள்.
இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டில் கடும் போட்டிகள் நடந்து வரும்போது பிரதீப் தனி ஒரு ஆளாக நின்று அனைவரையும் கேள்விகேட்டு வருகிறார். இந்நிலையில் Ranking டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கினார்.
யார் தங்களை வெற்றியாளர் என்று நினைத்து 1 ல் இருந்து 15 இடத்தில் நிற்க வேண்டும். அப்படி தான் தான் வெற்றி போட்டியாளர் என்று பிரதீப் நிற்க இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நிக்ஷன், விஷ்ணு, ஐஷு உள்ளிட்டவர்களிடன் பிரதீப் வாக்குவாதமும் செய்தார்.
அப்போது, நான் பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு நிறுபிக்க இந்த காசு இந்த இடம் தேவை, யாருக்காகவும் இந்த இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்னை அடிச்சி சாகடிச்சி எடுத்துக்கோங்க என்று ஆணித்தரமாக பேசியுள்ள பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.