பிக்பாஸ் நிகழ்ச்சியின் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் இவரா!! வைரலாகும் வீடியோ..
விஜய் தொலைகாட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது வரை உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வாரம் ஜனவரி 14 நிறைவு பெற்றது. பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனாவும், இரண்டாம் இடத்தினை மணியும் கைப்பற்றியிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது பிக்பாஸின் குரல் தான்.
கம்பீரமாக போட்டியாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்த குரலுக்கு சொந்தகாரர் யார் என்ற தகவல் வெளியாகி இருந்தாலும் அவரின் சமீபத்திய வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
சச்சிதானந்தம் என்பவர் தான் பிக்பாஸ் குரலாக 7 சீசனிலும் பணியாற்றி வருகிறார். அவர் ஆங்கிலத்தில் பேசிய சில ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Voice behind #BiggBossTamil ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 17, 2024
pic.twitter.com/m1KffZh8Uj
