மூணு வருஷ லவ்..அந்த விஷயத்தில் ஏதோ தப்பு பண்ணிட்டேன்!! பிக்பாஸ்8 அன்ஷிதாவின் பிரேக் அப்...

Bigg Boss Serials Tamil TV Serials Actress Bigg Boss Tamil 8
By Edward Nov 13, 2024 12:30 PM GMT
Report

அன்ஷிதா அக்பர்ஷா

கன்னட சின்னத்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அன்ஷிதா அக்பர்ஷா. விஜய் டிவியில் கடந்த 2022ல் துவங்கப்பட்ட செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் அன்ஷிதா.

மூணு வருஷ லவ்..அந்த விஷயத்தில் ஏதோ தப்பு பண்ணிட்டேன்!! பிக்பாஸ்8 அன்ஷிதாவின் பிரேக் அப்... | Biggbosstamil8 Anshitha Love Failure Story Open

இந்த சீரியலில் நடிகர் அர்னவ் நடித்துள்ள நிலையில் இருவரும் காதல் கிசுகிசுவில் சமீபத்தில் சிக்கினர். இதனையடுத்து அன்ஷிதா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல அர்னவும் சென்றார்.

இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நட்பாக பழகி வந்தப்பின் அர்னவ் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் சீசன் 8ல் நீடித்து வரும் அன்ஷிதா, சமீபத்தில் தன் காதல் பிரேக் கப் பற்றி முதன்முதலாக வாய்த்திறந்து பேசியிருக்கிறார்.

மூணு வருஷ லவ்..அந்த விஷயத்தில் ஏதோ தப்பு பண்ணிட்டேன்!! பிக்பாஸ்8 அன்ஷிதாவின் பிரேக் அப்... | Biggbosstamil8 Anshitha Love Failure Story Open

பிரேக் அப்

3 ஆண்டுகளாக காதலித்தேன், நன்றாக சென்றது, ஏதோ நான் பண்ண தப்பு. அவர் என்னை காதலிக்கும் போது என்ன கொடுக்கணுமோ அதை கொடுக்கவில்லை. திடீரென இந்தி பெண்ணை காதலிப்பதாக 3 மாதம் கழித்து கூறினார்.

அவர் மீது குறை சொல்லவில்லை, நான் உண்மையாக இருந்தேன். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. என் தோழியிடம் கால் செய்து கத்தி அழுதேன்.

இப்போதுவரை நான் அதிலிருந்து வரவில்லை. பிக்பாஸ்-க்கு வரும் முன் டாக்டரிடம் பரிந்துரை செய்துவிட்டு தான் உள்ளே வந்ததாக அன்ஷிதா கூறியிருக்கிறார்.