மெஸ்ஸி டூர் செலவு மட்டும் ரூ 100 கோடியா, அதிர்ச்சியாக்கிய செய்தி
Lionel Messi
By Tony
கால்பந்து உலகின் நம்பர் 1, கோட் என செல்லமாக அழைக்கப்படுபவர் மெஸ்ஸி. எப்படி சினிமாவில் அஜித்-விஜய் சண்டையோ அதே போல் கால்பந்து உலகில் மெஸ்ஸி-ரொனால்டோ ரசிகர்கள் சண்டை உச்சம் தொடும்.
இவர்கள் யார் கோட் என்ற சண்டை இன்று வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் மெஸ்ஸி சமீபத்தில் இந்தியா வந்தார், இதில் கொல்கத்தா வந்த போது சரியான நிகழ்ச்சி ஒருங்கினைப்பு இல்லாததால், ரசிகர்கள் கிரவுண்டிலேயே அடிதடியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர், மெஸ்ஸி டூர் செலவு மட்டுமே ரூ 100 கோடி செலவானதாக கூறியுள்ளார், இதை கேட்ட ரசிகர்கள் கடும் ஷாக் ஆகியுள்ளனர்.
கொல்கத்தா தாண்டி ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் மெஸ்ஸி கலந்துக்கொண்ட நிகழ்ச்சி நன்றாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.