யார் சொல்லியும் நான் பணப்பெட்டி எடுக்கல மன்னிச்சிடுங்க!! கானா வினோத் எமோஷனல்..
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.
கானா வினோத்
பணப்பெட்டி டாஸ்க் நடந்து முடிந்த நிலையில், 18 லட்சம் மதிப்பிலான பணப்பெட்டியை போட்டியாளர் கானா வினோத் எடுத்துச் சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய வினோத், இன்றைய எபிசோட்டில் விஜய் சேதுபதியுடன் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்த கானா வினோத், எல்லா மக்களுக்கு இதை உங்கள் காலாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன் என்றும், நான் யார் சொல்லியும் இதை செய்யவில்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
அதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது.