பிக்பாஸ் 9 : நீ அம்பளயா? பொம்பளயான்னு தெரியல!! கண்கலங்க வைத்த கெமி..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் பிக்பாஸ் சீசன் 9 விஜய் சேதுபதி தலைமையில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியுள்ளது.
20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ள நிலையில், சென்ற முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கிடையே சண்டை நிலவி வருகிறது. 2வது நாளான இன்று போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கெமி
அதில் பேசிய கெமி, என்னை பார்க்கும் கண்கள் எல்லாம் ஆபாசமா பார்த்திருக்கு. நிறைய பார்ட் டைம் மாடலிங் பண்னேன், ஆங்கர், ஆக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.
நீ ஒரு ஆம்பள மூஞ்சி, நீ அம்பளயா? பொம்பளயான்னு தெரியல, அப்படி சொன்னவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன், தன்னையும் தன் குடும்பத்தையும் மொத்தமா பார்த்திகிட்டது ஆம்பளத்தனம்னா, ஆமா நான் அம்பளதான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் கெமி.
இதனை கேட்ட சக போட்டியாளர்கள் கைத்தட்டி கெமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.